வாணியம்பாடி அருகே வீட்டிற்குள் நுழைந்த பச்சை பாம்பு

76பார்த்தது
வாணியம்பாடி அருகே வீட்டிற்குள் நுழைந்த பச்சை பாம்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகில் ஒரு வீட்டில் பச்சை நிறம் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. பாம்பை கண்டு வீட்டில் உள்ளவர்கள் கூக்குரல் எழுப்பினர். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டில் பதுங்கி இருந்த பச்சை நிறம் பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி