திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் 37 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.