வாணியம்பாடியில் பெண்கள் நீதி இயக்கம்(விமென் ஜஸ்டிஸ் மூமென்ட்) சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெண்கள் நீதி இயக்கம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பெண்கள் நீதி இயக்கம் துணைத்தலைவர் சபீனா யாசர் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி கூஜா காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஜமாத் சாலை, சி. என். ஏ சாலை, ஜின்னா சாலை, வாரச்சந்தை சாலை, மலங்க சாலை வழியாக சென்று மீண்டும் தனியார் பள்ளி வளாகத்தில் பேரணி முடிவடைந்தது.
இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி
கோஷங்களை எழுப்பி வாரு பேரணியாக சென்றனர்.
முன்னதாக தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதி ஆகியோர் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பின்னர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.