திமுக எம். பி களுக்கு வாணியம்பாடியில் பொதுச் செயலாளர் கட்டளை!

67பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி செலுத்தும் கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் மற்றும் கதிர் ஆனந்த் பங்கேற்றனர்.

அப்பொழுது திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்திற்கு சால்வை மற்றும் மாலை, அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.


அப்பொழுது பேசிய கதிர் ஆனந்த்


தாய் வீட்டு சீதனம் போல் அன்பும், அரவணைப்பும் எப்போதும் கிடைக்கிறது வாணியம்பாடி தொகுதியிற்கு நான் கொடுத்த வாக்குறுதியையெல்லாம் எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ அவ்வளவு விரைவாக செய்து முடிக்கின்றேன் என்று தெரிவித்தார்.


பின்னர் பேசிய திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்.


கடந்த முறை கதிர் ஆனந்த் வெற்றி பெற வாணியம்பாடி தான் பங்களித்தது இந்த தேர்தலிலும் 6 தொகுதிகளில் கதிர் ஆனந்திற்கு அதிக வாக்கு பெற்ற தொகுதி வாணியம்பாடி தொகுதி தான்.

என்னிடம் எல்லோரும் கூறினார்கள் வாணியம்பாடி இந்த முறை கைகொடுக்காது என்று நான் வாணியம்பாடியில் படித்தவன் எனக்கு ஓரளவிற்கு இந்த தொகுதி பற்றி தெரியும் இந்த தொகுதியில் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றிகள் என பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி