திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் சாலையில் உள்ள ஏரி கால்வாய் பகுதியில் வடகிழக்கு பருவமழையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து 14 துறையை சார்ந்த அதிகாரிகளை நியமித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, அப்பகுதியில் உள்ள கால்வாய்களின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.