வேலூரில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர். பேக்கரி கடைகளில் கேக் விற்பனை அமோகமாக இருந்தது. வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்திலும் சிறப்பு திருப்பலி நடந்தது. வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சீயோன் பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையொட்டி வேலூர் மாவட்ட எஸ்பி மதிவாணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.