தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் போதை பொருள் விழிப்புணர்வு

0பார்த்தது
வாணியம்பாடி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் சவரிமுத்து தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிராமிய காவல் ஆய்வாளர் பேபி கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு செட்டியப்பனூர் கூட்டு சலை, புதூர், கோவிந்தாபுரம் வழியாக பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைந்தது.

பேரணியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கைகளில் பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி வாறு பேரணியாக சென்றனர்.

பேரணியில் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி