80 சவரன் தங்க நகை 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

53பார்த்தது
80 சவரன் தங்க நகை 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் கொள்ளை
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பின்புறம் கதுவை உடைத்து உளளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 சவரன் தங்க நகைகள், 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் கொள்ளை.

வாணியம்பாடி, ஜூன். 9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி(55). இவர் ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி தன் மகளுக்கு கல்லூரியில் சேர்க்க நாமக்கல் சென்று பின்னர் அங்கே இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமாரி சுற்றுலா சென்று இன்று மதியம் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்புற கதுவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 80 சவரன் தங்க நகைகள், 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து பத்மாவதி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி