இருசக்கர வாகனங்களை கொள்ளை அடித்த17 வயது சிறுவன் கைது

53பார்த்தது
வாணியம்பாடி சுற்று வட்டார பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்களை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் கைது. கூட்டாளிக்கு போலீசார் வலைவீச்சு.
9 இருசக்கர வாகனங்களை பறிமுதல்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் சிறுவன் ஒருவன் முன்னுக்கு பின் முரணாக கூறியதை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்த ஆம்பூர் மோட்டு கொள்கை பகுதியை சேர்ந்த முஜமில் என்ற 17 வயது சிறுவன் என்பதும் அவர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது என தெரிய வந்தது. மேலும் இவரது கூட்டாளியான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி