திருப்பத்துார் டவுன் - Tirupathur Town

திருப்பத்தூரில் 1 மணி நேரமாக கனமழை- வீடியோ

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னல் இன்றி காற்று விசாமல் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி. தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க முடியாத சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் விரக்தி. தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வாங்கி வெடிக்க தயாராகி வரும் நிலையில் வழக்கமாக தீபாவளி நாளன்று மேகமூட்டம் காணப்பட்டு லேசான மழை பெய்யக்கூடிய பருவ காலம் இருப்பது வழக்கம். ஆனால் இன்று திடீரென திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னல் காற்று இல்லாமல் கனமழை பெய்ததால் ஏற்கனவே பயிர் செய்து அறுவடைக்கு தயாரான விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரம் தேவைப்படக்கூடிய பயிர்களை செய்யக்கூடிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும். ஏற்கனவே வழக்கத்திற்கு மாறாக பட்டாசுகளின் விலை உயர்ந்த சூழ்நிலையில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யும் பொதுமக்கள் மத்தியில் இந்த மழை அவர்கள் வாங்கி வைத்த பட்டாசை வெடிக்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా