வேலூர் விருப்பாட்சிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சுனில்குமார் (வயது 22). அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஷூ மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சுனில்குமார் நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து நிறுவனத்துக்கு புறப்பட்டு சென்றார். வல்லண்டராமம் கூட்ரோடு பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த லாரி சுனில்குமார் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சுனில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியி லேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுனில்குமாருக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.