உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின சிறப்பு விழிப்புணர்வு வாகனம் துவக்க விழா நடந்தது.
இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை குடியரசு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.