பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சபி நிஷா இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல வேலூரில் உள்ள ஆரணி ரோட்டில் நடந்த சென்றார். அப்பொழுது அந்த வழியாக வந்த மினி வேன் அவள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.