உலகம் முழுவதும் இயேசு பிறந்த நாளான இன்று கிறிஸ்துமஸ் திருவிழா கோலாகலமாக நடைபெற்று ஒரு நிலையில்.
இந்த உலகிற்கு தன்னையே ஒப்புக்கொடுத்த தியாகத்தை அடையாளப்படுத்தும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோவிலூர் ரோடு பகுதியில் உள்ள வானத்தின் வாசல் ஆலயம் சார்பாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 2000 பேருக்கு அவரவருக்கு தேவையான உடைகளை கேட்டறிந்து பேண்ட் சட்டை வேஷ்டி புடவை பெட்ஷீட் ரெயின் கோட் என சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன அதனை தொடர்ந்து அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டு கேக் இனிப்பு வழங்கி கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.
மேலும் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வானத்தின் வாசல் ஆலயம் வரை இயேசு பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆடல் பாடல் நிகழ்ச்சி மற்றும் வசனங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தி கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு ஆலய போதகர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.