திருப்பத்தூர் அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்ம அடி விழுந்துள்ளது. மாணவியின் பின் இருக்கையில் போதையில் அமர்ந்திருந்த தமிழரசன் என்பவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, மாணவி தனது சகோதரருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவியின் சகோதரர் அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார். இதனையடுத்து, தமிழரசன் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.