திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே சிறுவன் புகைப்பிடிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில் வீடியோவை வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கூடுதல் விசாரணையில் வீடியோவை இரண்டு காவலர்கள் வெளியிட சொன்னது தெரியவந்தது. இதையடுத்து ஆயுதப்படை காவலர்களான அசாருதீன் மற்றும் திருப்பதி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மாவட்ட எஸ்.பி. பிறப்பித்தார்.