திருப்பத்தூர் சோமநாயக்கன்பட்டியில் பட்டப்பகலில் ரயில் மூலமாக கடத்துவதற்காக மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்பிச் சென்ற நிலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில் நிலையத்தின் மதில் சுவரில் சிலர் அடுக்கி வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.