திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து, இரண்டு மாதங்கள் வரை சரியான விசாரணை நடத்தவில்லை எனில் புகார் மனுதாரர்கள், நேரடியாக புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ள வாராந்திர குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை அறிவிப்பு.