ஏலம் எடுப்பதில் திருப்பத்தூர் நகராட்சியில் தள்ளுமுள்ளு

543பார்த்தது
*திருப்பத்தூர் நகராட்சியில் 2024 25 முதல் 2026 27 வரை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை இனங்களின் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி இன்று நடக்கவிருந்த நிலையில் திடீரென தள்ளி வைக்கப்பட்டதால் பரபரப்பு*

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்களை மூன்று ஆண்டு காலத்திற்கு அலுவலக நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளிகளை இன்று 11 மணிக்குள் பெற்றுக் கொள்ளப்பட்டு தினசரி காய்கறி மார்க்கெட்டில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிட அறைகளில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை உள்ளிட்ட எட்டு வகையான இனங்களுக்கு குத்தகை உரிமைக்கு ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்பட்டு இன்று நடைபெற இருந்த நிலையில்.

குத்தகை ஏலம் எடுக்க உரிமைக்கோரிய அனைவரும் நகராட்சி அலுவலக வாசலில் காத்திருந்தனர். அப்போது திடீரென நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆணையர் திருநாவுக்கரசு நிர்வாக நலன் கருதி மறு தேதி அறிவிக்கும் வரை ஏலம் தள்ளி வைக்கப்படுகிறது என்று அறிவித்ததை தொடர்ந்து ஏலம் எடுக்க வந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி