திருப்பத்தூரில் மாவட்ட எஸ். பி
திடீர் ஆய்வு
திருப்பத்தூர் ஜின்னா சாலை சந்திப்பு மற்றும் நகர பகுதிகளில்
போக்குவரத்து முறைகளை பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஆல்பர்ட் ஜான் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும்
போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டியவை குறித்து அங்கு பணிபுரியும்
காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். உடன் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இருந்தனர்.