சட்ட சிக்கல் தீர்ந்த பிறகு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்

375பார்த்தது
*சட்ட சிக்கல் தீர்ந்த பிறகு நய்க்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பெண்ணுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பெண் இந்துமதி என்பவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பதவி பிரமாணம் செய்யப்படாத நிலையில் பட்டிலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க விடுதலை கட்சியினர், இந்திய கம்யூனிஸ்டு, திராவிட கழகம் உள்ளிட்ட திமுக தோழமை கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் கடந்த மாதம் பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறி இருந்தார். இதுவரை பதவி பிரமாணம் செய்து வைக்காத நிலையில் இன்று மீண்டும் இந்த விவகாரம் குறித்து நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்தல் அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதி மற்றும் தோழமைக் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைப்பெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி