திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆதியூர் தனியார் பள்ளியில் இருந்து வனத்துறையின் சார்பில் வன உயிரின வார விழாவையொட்டி வனங்கள் மற்றும் வன உயிரினங்களை காப்பது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ. பாஸ்கரபாண்டியன், இ. ஆ. ப. , அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வன அலுவலர் (மு. கூ. பொ. ) திரு. எஸ். கலாநிதி, இ. வ. ப. , வனச்சரக அலுவலர்கள் திரு. இளங்கோ, திரு. குமார், திரு. இரமேஷ், திரு. சோமசுந்தரம், வனவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பலர் உள்ளனர்.