பிறப்பு சான்று திருத்தத்திற்கான சிறப்பு முகாம்

72பார்த்தது
பிறப்பு சான்று திருத்தத்திற்கான சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு நிதி உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் தங்களின் பிறப்பு சான்றிதழ்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார்.

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவரது அனைத்து விதமான சான்றிதழ்களிலும் பெயர் பெற்றோர் பெயர் போன்ற அடிப்படை விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் ஆதார் அட்டை குடும்ப அட்டை கல்வி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து விதமான சான்றிதழ்களும் அடிப்படையானதாக பிறப்பு சான்று உள்ளது. அதில் தவறு ஏற்பட்டால் சில தகவல்களை திருத்துவதற்கு நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வி எந்த காரணத்திற்காகவும் பாதிக்கப்படக்கூடாது என ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி