மதுக்கடையில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை

1526பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலை, விஷமங்கலம் அருகே உள்ள நாகராஜன்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. ஆனால் அது அரசு மதுபான கடை தான் என்பதற்கு அங்கு போர்டு எதுவும் இல்லை. இருந்தாலும் கூட அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் தினம் தோறும் கூலி வேலை செய்யும் மக்கள், படிக்காத பாமர மக்கள் குடிப்பதற்காக மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 முதல் 25 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்து வருகின்றனர். அது ஒருபக்கம் இருக்கும் நிலையில் அந்த மதுபான கடையில் காலாவதியான மது பாட்டில்களை அதிகபட்ச விலையான 200 ரூபாய்க்கு மேல் 225 ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மது பாட்டில்களை வாங்கி காலாவதி ஆகி உள்ளது என்று கேட்டபோது அதுக்கு என்ன அதே குடி போ என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி