மத்திய தொழிலாளர் அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் (நிதி ஆப்கே நிகட்- 2. 0) நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் நடத்தவும், இதனை வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர்வு முகாம் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி இந்த மாதத்துக்கான (ஜூலை) வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் செயின்ட் சார்லஸ் பள்ளியில் வருகிற 29-ந் தேதி காலை 9 முதல் மாலை 5. 45 மணி வரை நடைபெற உள்ளது என வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் ரித்தேஷ் பக்வா தெரிவித்துள்ளார்.