திருப்பத்தூர்: 'நிலத்தை காணும்..' - மாற்றுத்திறனாளி மனு

73பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியைச் சேர்ந்த ரஜினி மகன் அறிவுமணி (44) மாற்றுத்திறனாளி இவருக்கும் பங்காளி உறவு முறையான முனிசாமி மற்றும் இவருடைய மனைவி கிருஷ்ணவேணி ஆகிய இருவருக்கும் இடையே 94.5 சென்ட் அளவிலான நிலப் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது. 

இதனை அளந்து தரக்கோரி அறிவுமணி தரப்பில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அறிவுமணி என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தன்னுடைய நிலத்தை காணோம் கண்டுபிடித்து தாங்க இயலாவிட்டால் வருகின்ற 27ஆம் தேதி குடும்பத்துடன் ஜடையனூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக மனு அளித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி