*புதூர் நாடு மலைப்பகுதியில் ஒற்றைக்கொம்பு காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம். இன்னும் ஒரு வாரம் அந்தப் பகுதியிலேயே தங்கி மீண்டும் சென்று விடும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மன அலுவலர் தகவல். *
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரத்தில் ஒற்றைக் கொம்பு யானை ஒன்று தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வந்த நிலையில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து அதனுடைய இயல்பு பாதைக்கு விரட்டி அனுப்பி வைத்தனர்.
அந்த ஒற்றைக் கொம்பு காட்டு யானை மீண்டும் ஜவ்வாது மலை புதூர் நாடு ஊராட்சி பகுதியில் உள்ள பேளூர் அடுத்த கீழானூர் கிராம பகுதிகளில் உள்ள நிலங்களில் இரவு நேரங்களில் சுற்றித்திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.