*திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்து நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்ததால் சலசலப்பு. *
வாரம் தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாணியம்பாடி ஆம்பூர் ஆலங்காயம் நாற்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக மனுக்களை பெற்று அவரவர் குறைகளுக்கு ஏற்ப துரை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் பரிந்துரைக்கப்பட்டு தீர்வு காண்பது வழக்கம்.
வழக்கம்போல இன்றும் திங்கட்கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கிற்கு முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
அப்போது வயதானவர் பள்ளி மாணவி கர்ப்பிணி பெண்கள் மாற்றுத்திறனாளி என பலதரப்பட்ட மக்கள் நீண்ட வரிசையில் வெயிலில் கால் கடுக்க நின்று கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் ஒருவர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.