திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி -அம்பூர் பேட்டையில் உள்ள பாவடித்தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழாவில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஐம்பெரும் சக்திகளின் அற்புத அம்மன் திருவீதி உலாவை தேர் இழுத்து துவக்கி வைத்தார் உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.