திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திருவண்ணாமலை சாலை அருகே சின்ன கடை வீதியில்
இந்தியா நம்பர் ஒன் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அதிகாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அவ்வழியாக சென்ற பொழுது ஏடிஎம் மையத்தின் கதவுகள் திறந்த நிலையிலும் இயந்திரங்கள் உடைக்கப்பட்ட நிலையிலும் கண்டதை அறிந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அதன் அடிப்படையில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையிலும் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்து குப்பையில் போட்டு சென்றுள்ள நிலையில் ரொக்கப்பணம் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.