திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் வாயிலாக திருநங்கைகள் தொழில் தொடங்குவதற்கு மானிய தொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
2024 - 2025 நிதியாண்டிற்கு திருநங்கை தொழில் தொடங்குவதற்கு மானிய தொகை பெற தகுதியான விண்ணப்பங்கள் நேர்காணல் தேர்வு குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தேர்வு குழுவால் 64 திருநங்கைகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 64 பேருக்கும் தகுதியான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட துறை தலைமை இடத்திற்கு அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே மானிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.