வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 63,739 மாணவ மாணவியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெற்று, 1,923 நபர்கள் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாணவர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.