திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏ கே மோட்டூர் பகுதியை சார்ந்த கோவிந்தராஜ் மனைவி விஜயா இவர்களுக்கு திருமணம் ஆகி 4 பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்று பேர் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
ஒரு பெண் மாற்றுத்திறனாளியாக வீட்டில் வசித்து வருகிறார்.
விஜயா வின் நடத்தையில் கணவர் கோவிந்தராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது நான்கு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கோவிந்தராஜின் மனைவி விஜயாவுக்கு போன் செய்தபோது பிஸியாக இருந்துள்ளது. தொடர்ந்து அழைப்பிற்கு பிறகு போனை எடுத்து பதட்டம் உடன் பேசி உள்ளார்.
சந்தேகம் அடைந்த கோவிந்தராஜ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோவிந்தராஜ் மற்றும் மருமகன் விஜயாவை பல இடங்களில் தேடியுள்ளனர்.
ஏகே மோட்டூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் விஜயாவின் கள்ளக்காதலன் மது அருந்திவிட்டு இருவரும் வாழைத்தோப்பில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
மனைவியை கல்லால் தலையில் தாக்கி உள்ளார். கள்ளக்காதலன் கனிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தை கோவிந்தராஜ் பெற்று எரித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.