கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைதீர்வு முகாம்- நாளை நடக்கிறது

60பார்த்தது
கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைதீர்வு முகாம்- நாளை நடக்கிறது
திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணி தொடர்பாகவும், பணியின்போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காணும் வகையில் குறைதீர்வு முகாம் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலக முதல் மாடியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10. 30 மணிக்கு நடக்கிறது.

இதில் திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரியும், ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கலாம்.

இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசாணை மற்றும் பதிவாளர் கடிதங்கள், சுற்றறிக்கைக்கு உட்பட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி