டி. மகேஷ்
செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
8870066400
*தொழில்துறை கூடுதல் இயக்குனராக இருந்த சிவசௌந்தரவல்லி திருப்பத்தூர் முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்*
தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் பேரிடர் மேலாண்மை துறை இயக்குனராக இருந்த
மோகன சந்திரன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும் தமிழக அரசால் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் திடீரென மோகன சந்திரன் திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு நேற்று அங்கு பதவி ஏற்று கொண்டார்
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தொழில்துறை கூடுதல் இயக்குவதாக இருந்த சிவசௌந்தரவல்லி மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்று இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உதயமான பிறகு மாவட்டத்திற்கு ஆட்சியராக வருகின்ற முதல் பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.