விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு

75பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது

மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு நிறை குறைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று அதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது

அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விவசாயி அம்பலூர் அசோகன் என்பவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3500 சுய உதவிக் குழுக்கள் உள்ளன அந்த குழுக்களில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருளை சந்தை படுத்தவோ மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும் எல்லா மாவட்டத்திலும் இருப்பது போல் நம்முடைய மாவட்டத்திலும் ஊரக புத்தாக்க திட்டத்தை செயல்படுத்தி எண்டர்பிரைசஸ் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் ஒரு ஊறுகாய் வியாபாரி நிதி அமைச்சர் ஆனது போல் 3500 நிதி அமைச்சர்களை உருவாக்க முடியும் எனக்கு கூட்டத்தில் பங்கேற்று அசோகன் குறித்து பேசி உள்ளார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி