வேலூர் மாவட்டம் கணியம்படி ஊராட்சி ஒன்றியம் சோழவரம் பஞ்சாயத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் ஊசி போடும் அறை, பிரசவத்தை பதிவு செய்யும் அறை, இதய சுருள்பட அறை, தொற்றுநோய் பிரிவு, சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.