திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் எம். காசி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்பாட்டத்தில், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை மின்கணக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை மின்கணக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.