திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. தோல் மற்றும் அது சார்ந்த உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் தொழில் முனைவோர்கள் தொழில் மேற்கொள்வதற்கான துறையை சார்ந்த ஒருங்கிணைப்புச் சேவையை மேற்கொள்ள வேண்டும் என சிறு மற்றும் குறு நடுத்தர முனைவோர்கள் முனைவோர்கள்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.