*திருப்பத்தூர் பிரதான சாலையில் பொது மக்களுக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்ட கட்சி பேனர்களை அகற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியர்! பேனர்களை அகற்றிய நகராட்சியினர்*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் கட்சி மற்றும் விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக உள்ள பேனர்களை அகற்ற நகராட்சி ஆணையருக்கு சாந்திக்கு புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவு பிறப்பித்தார்
உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த கட்சி மற்றும் பல்வேறு பேனர்களை அகற்றினர்
அதன் காரணமாக சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மேலும் கட்சி விளம்பர பேனர்களை அப்புறப்படுத்தி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.