திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி. வீரமணி தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை, தமிழகத்தில் கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு திமுக அரசு துணை போகுவதாக கூறி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வந்த போது போலீசார் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர மறுத்துள்ளனர்.

 இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் திருவண்ணாமலை சாலையில் உள்ள திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே குவிந்துள்ளனர். மேலும் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்துள்ளனர். இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. இதனால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வந்தால் கைது செய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி