திருப்பத்தூர் மாவட்டம் ராஜமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களின் தரம் குறித்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். ஒருமுறை பயிரிடுவதற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆகுவதாக அங்கு பயிரிடப்பட்டிருந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.