40-க்கும் மேற்பட்டவர்களிடம் வேலை வாங்கி தருவதாக பலகோடி மோசடி

69பார்த்தது
ஒரே கிராமத்தை சார்ந்த 40-க்கும் மேற்பட்டோர்களிடம் வெளிநாட்டில் வேலைக்கு வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்த தனிநபர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பஞ்சாயத்துக்கு உட்பட்ட மல்லகுண்ட பகுதியில் வசித்து வரக்கூடிய 40க்கும் மேற்பட்டவர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரதீப்குமார் வயது 30 என்ற நபர் பொதுமக்களிடமிருந்து ஒவ்வொரு நபரிடமிருந்தும் தலா ரூ. 6 லட்சம், 6. 5 லட்சம், 7 லட்சம், என 40க்கும் மேற்பட்டோர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளதாகவும், இது சம்பந்தமாக பத்திரிகை செய்தியும், வாட்ஸ் அப் மூலமாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. வேலைக்காக பணம் செலுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு நபரையும் அவர் வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. தற்பொழுது அவர் தலைமறைவாக உள்ளார். அவரை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட நபர்களிடம் அவர் ஏமாற்றிய பணத்தை திரும்ப வாங்கி தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் ஒரே கிராமத்தைச் சார்ந்த 40க்கும் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி