திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டம்

76பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று(செப்.23) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலைவசதி, கடனுதவி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 355 மனுக்கள் வழங்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ. 1200 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி