பாராஞ்சி அருகே லாரி பைக் நேருக்கு நேர் மோதல்; இருவர் படுகாயம்

68பார்த்தது
பாராஞ்சி அருகே லாரி பைக் நேருக்கு நேர் மோதல்; இருவர் படுகாயம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாராஞ்சி அடுத்த ஜோதிபுரம் கிராமத்தில் நேற்று லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற கஜேந்திரன், அசோக் குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி