இராணிப்பேட்டை மாவட்டம் பெரியதாங்கல் பகுதியை சேர்ந்தவர் விவேக். கடந்த 25ஆம் தேதி மாலை பால் வியாபாரம் தொடர்பாக வேனில் லோடு ஏற்றிக் கொண்டு கே. வி. குப்பம், வேலப்பாடி மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பால் பாக்கெட்களை சப்ளை செய்துவிட்டு விடியற்காலை காட்பாடி விருதம்பட்டிலிருந்து கழிஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள புற்றுக் கோயில் பின்புறம் வாகனத்தை நிறுத்திவிட்டு அசதியாக இருந்ததால் தூங்கிய போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விவேக்கின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாக்கெட்டிலிருந்த பணம் என மொத்தம் ரூ. 19, 405 பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதேபோல் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த கார்திகேயன் இவர் விருதம்பட்டு பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார் இவர் நடத்தி வரும் துரித உணவகத்திற்கு சென்ற சில மர்ம நபர்கள் உணவு கொடுக்குமாறு பேச்சுக் கொடுத்து அவர் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருத்த ரூபாய் 4, 500-ஐ திருடிச் சென்றுள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து விவேக் மற்றும் கார்த்திகேயன் அடுத்த புகாரின் பேரில் விருதம்பட்டு போலீசார் வழிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த சந்தோஷ், விஷால், அரவிந்தன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.