காட்பாடியில் ரேஷன் கடையின் பூட்டு உடைத்தவர் கைது

67பார்த்தது
காட்பாடியில் ரேஷன் கடையின் பூட்டு உடைத்தவர் கைது
காட்பாடி தாராபடவேட்டில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு அதேப்பகுதியைச் சேர்ந்த பிரபு சேல்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கடையின் ஷெட்டரை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரபு காட்பாடி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மரத்தடி கற்பக விநாயகர் கோயிலில் உண்டி உடைத்து திருட்டி சென்றனர். மேலும் டெல் குடியிருப்பு பகுதிக்கு பின்புறத்தில் உள்ள விநாயகர் கோயில் உண்டியல் திருட்டு போன்ற சம்பவங்கள் அரங்கேறியது. இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த குமார் (40) என்பதும், இவர் ரேஷன் கடை உடைப்பு, கோயில்களில் உண்டியல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி