ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 41. 98 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப் பணியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இன்று திறந்து வைத்தார்.