சோளிங்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஐப்பேடு பகுதியை சேர்ந்த கோபி (வயது24), துரைப்பாண்டியன் (23) ஆகிய இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அவர்கள் இருவரையும் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.