ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நெறிஞ்சிந்தாங்கல் கிராமத்தில் ரூ. 10. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் திறந்து வைத்தார். பின்னர், மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
இதில் மாவட்ட தொழில் வணிகத்துறை துணை இயக்குநர் ஆனந்தன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.